Categories
மாநில செய்திகள்

#BREAKING: டாஸ்மாக் பார் டெண்டர் வெளிப்படையா நடந்தது…. அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!!!!

முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் மதுவிலக்கு துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்து வருகிறார். இந்நிலையில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு தமிழ்நாடு பார் உரிமையாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் அரசின் விதிகளை பின்பற்றி டாஸ்மாக் பார்களில் டெண்டர் நடப்பதில்லை என குற்றம்சாட்டி நடைபெறுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார் உரிமையாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தபோது, தமிழகத்தில் டாஸ்மாக் பார் டெண்டர் ஒளிவுமறைவின்றி வெளிப்படை தன்மையுடன் நடந்தது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |