குரூப் 4 மற்றும் குரூப் 2A தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி சித்தாண்டியை சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 16 பேரை கைது செய்துள்ளனர். அதேபோல குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக 42 பேர் மீது வழக்கு செய்யப்பட்டு, இதுவரை 8 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை சிவகங்கை – ராமநாதபுரம் செல்லும் சாலையில் உள்ள தனது தோட்டத்தில் பதுங்கியிருந்தபோது சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சிபிசிஐடி போலீசார் சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.