தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி கொண்டிருப்பதால் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருவ மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் நடப்பு டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழைப் பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 132 சதவீதத்திற்கும் மேல் மழை பெய்யக் கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.