Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: டிசம்பர் 14 முதல் வங்கிகளில்… இனி 24 மணி நேரமும்… அதிரடி அறிவிப்பு…!!!

வங்கி கணக்குகளில் இருந்து பெரிய அளவில் பணம் அனுப்ப பயன்படுத்தப்படும் சேவை பற்றி ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலகில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மக்கள் அனைவரும் தங்களின் சேமிப்பு பணத்தை வங்கியில் சேமித்து வைக்கின்றனர். தங்களின் தேவைக்கு ஏற்றவாறு அவ்வப்போது பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் வங்கி கணக்குகளில் இருந்து பெரிய அளவில் பணம் அனுப்ப பயன்படுத்தப்படும் RTGS சேவை, டிசம்பர் 14ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதன் மூலம் தற்போது வரை ரூ.4.17 லட்சம் கோடி வரை பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் நேர வரம்பு நீக்கப்படுவதால், இனிவரும் காலங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் இதுவரை சில நாடுகள் மட்டுமே இருந்த நிலையில், இந்தியாவும் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை வங்கி வாடிக்கையாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |