Categories
மாநில செய்திகள்

#BREAKING : டிசம்பர் 30ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும்… அமைச்சர் அறிவிப்பு..!!

டிசம்பர் 30ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/ – வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2.1.2023 அன்று சென்னையிலும், அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்களும் தொடங்கி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் டிசம்பர் 30 முதல் வழங்கப்படும் என தமிழக அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். வரும் டிசம்பர் 30ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என சென்னையில் அமைச்சர்கள் பெரிய கருப்பன், சக்கரபாணி கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர். அதன்படி டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய 5 நாட்கள் டோக்கன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |