Categories
மாநில செய்திகள்

Breaking: டிசம்பர் 30ஆம் தேதி விடுமுறை… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளதால் கடலூர் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்த அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்து கோவில்களிலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. அதனால் கடலூர் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 23ஆம் தேதி சனிக்கிழமை வேலை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |