தமிழகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை உரிமையாளர் பதவிகளுக்கான தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் என்று சற்றுமுன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக உட்கட்சி தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அதன்படி அதிமுக உட்கட்சி தேர்தல் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்று முடிவுகள் அறிவிக்கப்படும். நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்புமனு தாககல் செய்யப்படும். டிசம்பர் 5 ஆம் தேதி வேட்பு மனு மீதான பரிசீலனை நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
Categories