டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுகமாகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சோதனை முறையில் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்குள் டிஜிட்டல் நாணயம் முழு பயன்பாட்டிற்கு வரும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அரசு பத்திரங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனை பயன்பாட்டிற்கு டிஜிட்டல் நாணயங்கள் பயனுள்ளதாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.. பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படுகிறது.