சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரி இல்லை. அவரது உடல்நிலை தற்போது மிக மோசம் அடைந்ததால் சென்னையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த டிராபிக் ராமசாமிக்கு கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல்நிலை மிகவும் மோசமானது ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
Categories