Categories
மாநில செய்திகள்

Breaking: டிவியில் இனி இதை பார்க்க முடியாது… அதிரடி அறிவிப்பு..!!

டிவியில் இனி அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை ஒளிபரப்ப தடைவிதித்து
தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். டிவி, மொபைல் போன், யூடியூப் போன்றவற்றில் தங்களது தேர்தல் பிரச்சார விளம்பரங்களை அனைத்து கட்சியினரும் ஒளிபரப்பி வருகின்றன. ஒரு கட்சியினர் மற்றொரு கட்சியினர் செய்த ஆட்சியில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என தமிழகம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். டிவியில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் ஒளிபரப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதி மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனையாக விதிக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |