டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தங்களது அணி வீரர்களை தேர்வு செய்து அறிவித்து விட்டது.. ஆனால் இந்திய அணி தரப்பில் வீரர்கள் இன்னும் அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.. இதனால் ரசிகர்கள் எப்போது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தனர்..
இதனையடுத்து டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியலை இன்று இரவு 9 மணிக்கு பிசிசிஐ அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சஹர், அஸ்வின், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, முகம்மது சமி, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.. அணியின் ஆலோசகராக எம்எஸ் தோனி இருப்பார் என பிசிசிஐ துணைத்தலைவர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.. காத்திருப்பு வீரர்களாக ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் ஆகியோர் இருக்கின்றனர்..
Standby players – Shreyas Iyer, Shardul Thakur, Deepak Chahar.#TeamIndia
— BCCI (@BCCI) September 8, 2021