ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து தாறுமாறாக அதிகரித்து வந்தது . இவற்றை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தன. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்தது. இது பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் அமலுக்கு வந்தது. அதை தொடர்ந்து பல மாநிலங்களில் இன்னும் வாட் வரி குறைக்காமல் உள்ளது.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 25 குறைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். இது அம்மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. இந்த அறிவிப்பு ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் முதல் அமலுக்கு வரும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். அதே போல் பிற மாநிலங்களிலும் பெட்ரோல் மீதான விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.