தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது எஸ் பி வேலுமணி சுமார் 50 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவருக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்பிறகு எஸ் பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் அவருக்கு தொடர்புடைய நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் இருந்த நிரந்தர வைப்பீடு தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை அடக்கம் செய்தது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் 5 ஒழிப்புத்துறை மனு தாக்கல் செய்தது.
இதனைத் தொடர்ந்து 10 வாரத்தில் விசாரணையை முடித்து டெண்டர் முறைகேடு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகு தனக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கின் முதற்கட்ட விசாரணை அறிக்கையை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உயர்நீதிமன்றத்தில் வேலுமணி மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில் டெண்டர் முறைகேடு புகாரை லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி பணி ஒப்பந்தங்கள் சட்டவிரோதமாக வழங்கியதாக ஆர் எஸ் பாரதி அரப்போர் இயக்கம் ஒழிப்புத் துறை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து எஸ் பி வேலுமணி வழக்கு தொடுத்திருந்தார்.
இந்நிலையில்டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணை அறிக்கையை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலுமணியின் மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது.ஆனால் விசாரணை அறிக்கையை அவரிடம் அளிக்க வேண்டும் என தமிழக போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.