நாட்டில் டெல்டா கொரோனாவுக்கு மாறாக தற்போது ஒமைக்ரான் பரவ தொடங்கியுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் பரவிவருகிறது. தற்போது வரை 20 மாநிலங்களுக்கும் மேல் பரவிய இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.
இந்நிலையில் நாட்டில் டெல்டா கொரோனாவுக்கு மாறாக தற்போது ஒமைக்ரான் பரவ தொடங்கியுள்ளதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ஒமைக்ரான் தொற்று தற்போது பரவும் நிலையை எட்டியுள்ளது என்று சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளான நிலையில் மத்திய அரசு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.