காவேரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக சட்டப்பேரவையில் நிறைவேற்றபட்ட மசோதா அரசிதழில் சட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து முதலமைச்சர் வெளியிட்டிருந்தார். அதை தொடர்ந்து காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த சட்டமுன்பதிவு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டமாக இயற்றப்பட்டதை தொடர்ந்து இந்த சட்டமசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் இது சட்டமாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.