டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்..
தீபாவளி அன்று பட்டாசுகளை எப்போது வெடிக்க வேண்டும் என கட்டுப்பாட்டை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ளது. அதன்படி காலையில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.. வரும் 24ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் மட்டும் பட்டாசு விற்பனை நடந்தால் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு போதுமாக இருக்காது. அகில இந்திய அளவில் குறிப்பாக தமிழகத்தின் சிவகாசியில் இருந்து செல்லும் பட்டாசுகள் இந்தியாவெங்கும் விற்பனை ஆகின்றன. அதன் மொத்த விற்பனை அளவு பல நூறு கோடிகளை தாண்டும்..
இந்நிலையில் டெல்லியில் பட்டாசு விற்பனை அனுமதிக்க கோரி அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.. அதில், வேறு எந்த மாநிலமும் பட்டாசுக்கு முழுமையாக தடை விதிக்காத போது டெல்லியில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவகாசியை சுற்றியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அனுமதிக்க வேண்டும். விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனையை டெல்லியில் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்..