நீட் முதுகலை படிப்பில் கவுன்சிலிங் கோரி டெல்லி பயிற்சி டாக்டர்கள் நடத்திய போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளை சேர்ந்த பயிற்சி டாக்டர்கள் முதுநிலை படிப்புக்கான கவுன்சிலிங் நடத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அவர்களை கலைந்து செல்லும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியதால், நேற்று வன்முறை ஏற்பட்டது. இதில் 7 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
தற்போது இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடருகிறது. இதனால் நோயாளிகள் மிகுந்த அளவில் பாதிப்படைந்துள்ளனர். இந்த போராட்டம் காரணமாக துணை ராணுவ படையினர் ஏராளமானவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.