டெல்லியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது.
சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது ஐ.என்.எக்ஸ் மீடியோ முறைகேடு, ஏர்டெல்-மேக்சிஸ் முறைகேடு ஆகியவை தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டு ஏற்கனவே சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணை இன்று காலை முதல் ப சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லம், மும்பை, டெல்லி என ஏழு முதல் எட்டு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வந்தது. காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ப. சிதம்பரம் பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் காலை முதல் நடைபெற்று வந்த சிபிஐ நடத்திய சோதனை நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.