Categories
தேசிய செய்திகள்

BREAKING : டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்தி இடம்பெறாது- மத்திய அரசு..!!

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்தி இடம்பெறாது என்று மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்கு பெறவிருந்த அலங்கார ஊர்தி நேற்று நிராகரிக்கப்பட்டது.. அதாவது, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் பாரதியார் உருவங்கள் அடங்கிய  அலங்கார ஊர்தி நேற்று நாலாவது சுற்று வரை சென்ற நிலையில், நிராகரிக்கப்பட்டது.

வ.உ.சி, வேலுநாச்சியார் ஆகியோர்கள் தேசிய அளவில் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் இல்லை.. இவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனக் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்தனர்.. தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டது.  மேலும் தமிழக அரசின் ஊர்தி மட்டுமின்றி கேரளா, தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்..

இதையடுத்து பிரதமர் உடனடியாக தலையிட்டு தங்களது மாநில அலங்கார ஊர்தி கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேற்று கடிதம் எழுதி இருந்தார்..

இந்தநிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின்  கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு.. குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஊர்தி பங்கேற்காதது குறித்து மறுபரிசீலனை செய்ய முடியாது என்று பாதுகாப்பு துறை அமைச்சகம்  திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.. தமிழகம், மேற்கு வங்க ஊர்திகள் இடம்பெறாதது குறித்த காரணங்களை தெரிவித்து விட்டோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2 மாநிலங்களிலும் பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்பினர் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது மத்திய அரசின் இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Categories

Tech |