டெல்லி குடியரசு தின அணிவகுப்பிற்கு நிராகரிக்கப்பட்ட ஊர்தி தமிழகத்தில் காட்சிப்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி குடியரசு தின அணிவகுப்பிற்கு நிராகரிக்கப்பட்ட ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அலங்கார ஊர்தி பயணப்படும்..
விடுதலைப் போராட்ட தியாகிகளின் தீரத்தையும், தியாகத்தையும் நினைவு கூறும் விதமாகவே தமிழக ஊர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்தவித காரணமும் குறிப்பிடாமல் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
ஆங்கிலேய வல்லாதிக்க எதிர்ப்பில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
பாதுகாப்புத் துறை அமைச்சரின் கடிதத்தில் எந்தவித காரணங்களும் குறிப்பிடப்படவில்லை. தமிழக ஊர்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்..