டெல்லி வன்முறை சம்பவத்தில் தலைமை காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது.
யமுனா விகார் , மஜ்பூர் ஆகிய பகுதிகளில் இந்த வன்முறை சம்பவம் பரவியதையடுத்து அங்குள்ள போராட்டக்காரர்கள் பொதுமக்கள் மீதும் , காவலர் மீதும் கல்லை கொண்டு எறிந்தனர். பெட்ரோல் பங்க் , பொதுச்சொத்துக்கள் எரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர்.
இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று மாலை டெல்லி வர இருக்கும் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் இந்த வன்முறை சம்பவம் அரங்கேறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வன்முறையானது வடக்கு டெல்லி என பல பகுதியில் பரவியதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வன்முறை சம்பவத்தில் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட தலைமைக்காவலர் ரத்தன்லால் உயிரிழந்துள்ளார் என்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
One Delhi Police head constable has lost his life and one DCP injured during clashes between two groups in Delhi's Gokulpuri.
— ANI (@ANI) February 24, 2020