Categories
தேசிய செய்திகள் மற்றவை விளையாட்டு

BREAKING : டோக்கியோ பாராலிம்பிக்… “இந்தியாவிற்கு 2ஆவது வெள்ளிப் பதக்கம்”… வென்றார் நிஷாத் குமார்..!!

டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

16-வது பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் 2.06 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.. டி47 உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்..

Nishad Kumar Wins Historic Silver in High Jump Athletics LIVE | Tokyo Paralympics 2020 Live Score Updates, Day 5, Results Medal Tally: Bhavina Patel

முன்பாக காலையில் டோக்கியோ பாராலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் பிரிவில் பவினாபென் படேல்,  வெள்ளிப் பதக்கம் வென்றார்.. தற்போது இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில் இந்தியாவுக்கு 2 பதக்கம் கிடைத்துள்ளது.

Categories

Tech |