Categories
தேசிய செய்திகள்

BREAKING : ட்ரம்புக்காக இந்தியாவே காத்திருக்கின்றது – மோடி ட்வீட்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்காக இந்தியாவே காத்திருக்கின்றது என்று மோடி ட்வீட் செய்துள்ளார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்றும் , நாளையும் என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது.அமெரிக்கா அதிபர் வருகையையொட்டி அகமதாபாத் , குஜராத் பலப்படுத்தப்பட்டதோடு டிரம்ப்க்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து தனி விமானத்தில் அதிபர் ட்ரம்ப் நேற்று புறப்பட்டார். இன்று காலை 11 மணியளவில் அகமதாபாத்  வரும் ட்ரம்ப் பிரதமர்பை வரவேற்க மோடி உள்ளிட்டோர் தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் , அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வருகைக்காக இந்தியாவே காத்திருக்கின்றது . ட்ரம்ப்பின் வருகையால் இந்தியா – அமெரிக்க நட்புறவு மேலும் வலுப்பெறும் என்று  பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |