Categories
சினிமா தேசிய செய்திகள்

BREAKING: தங்கக் கடத்தல் : தேடப்பட்ட ஸ்வப்னா கைது …!!

கேரள மாநிலத்தை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ் தற்போது பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் பெங்களூருவில் அவரை கைது செய்துள்ளனர். அவர் எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார் ? என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. ஆனால் கைது செய்யப்பட்டிருப்பது உறுதி என தெரிவித்திருக்கிறார்கள்.

நாளை காலை 11 மணிக்கு அவரை கொச்சியில் உள்ள NIA அதிகாரிகள் முன்பு ஆஜர்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கேரளாவிலிருந்து ஸ்வப்னா சுரேஷ் தமிழகத்துக்குள் நுழைந்ததாக கருதப்பட்டது. அதனால் தமிழக போலீசார் உதவியுடன் அவரை தேடி வந்து உதவி நிலையில், அவரை தற்போது பெங்களூரில் கைது செய்து இருக்கிறார் என்ற அறிவிப்பு வந்திருக்கிறது.

Categories

Tech |