Categories
மாநில செய்திகள்

BREAKING: தடுப்பூசி போட்டால் தான் சம்பளம்…. அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

அதனால் மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் வருகின்ற 1-ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு ஊசி திருவிழா இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |