23-ம் தேதி கூடவுள்ள அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்படுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பை மீறி ஒற்றைத் தலைமைக்கான தனித் தீர்மானம் இன்றே இறுதி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களை ஒவ்வொருவராக இபிஎஸ் தட்டி தூக்கி வருகிறார். நேற்று இரவு வரை ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ரவிச்சந்திரன், சென்னை மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயதேவி, நெல்லை மாவட்ட செயலாளர் கணேச ராஜாவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து தனது ஆதரவாளர்கள் இபிஎஸ் பக்கம் செல்வதால் ஓபிஎஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.