சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் 4 பேரை கைது செய்து பிறகு, இந்த வழக்கில் நபராக முத்துராஜ் என்ற தலைமைக் காவலரை தேடிவந்தனர். இன்று காலை கூட சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தெரிவிக்கும்போது இன்று அல்லது நாளைக்குள் அவரை கைது செய்வோம் என்று தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில் தற்போது விளாத்திகுளம் டிஎஸ்பி படையினர் தேடப்பட்டு வந்த முத்துராஜ் பைக்கை பறிமுதல் செய்தனர்.
தற்போது காவலர் முத்துராஜை கைது செய்திருப்பதாக உறுதி செய்துள்ளார்கள். இதனை கண்காணிப்பாளர்கள் ஜெயக்குமார். தெரிவித்திருக்கின்றார். இந்த வழக்கில் இதுவரை நான்கு பேர் கைதாகியுள்ள நிலையில் தற்போது கைதானவர் எண்ணிக்கை 5 ஆக மாறுகிறது. இவர் சொந்த ஊர் என்பது விளாத்திகுளம் வட்டார பகுதிகளில் உள்ள அரசன்குளம் என்று சொல்லப்படுகிறது.