சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது.
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பேசு பொருளாக மாறியது. இந்த மரணத்தில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும், இதனை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது தமிழக உள்துறை இந்த வழக்கை சிபிஐ இடம் ஒப்படைத்து அதற்கான அரசாணை பிறப்பித்துள்ளது.