தனது பயணத்தின் போது மக்கள் பாதிக்கக்கூடாது என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். தனது வாகன பயணத்தின் போது பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமல் தேவையான நடவடிக்கைகளை செய்ய வேண்டும். இது குறித்து சென்னை ராஜ்பவனில் டிஜிபி சைலேந்திரபாபுவிடம் ஆளுனர் ஆர்.என். ரவி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று சென்னை ராஜ்பவனில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு சி சைலேந்திரபாபு விடம் தெரிவித்துள்ளதாவது, தனது வாகனத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.