மேட்டூர் அருகே உள்ள கூழியுரைச் சேர்ந்த தனுஷ் என்ற 19 வயது மாணவன் தனது பள்ளிப்படிப்பை 2019ஆம் வருடம் முடித்த நிலையில் இரண்டு முறை நீட் தேர்வை எழுதி இருக்கிறார். அந்த இரண்டு முறையும் அவர் தோல்வியடைந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக நேற்று நீட் தேர்வு எழுத இருந்தார். இருப்பினும் இந்த முறையும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சியினர் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.