தமிழக முதலமைச்சராக இன்று காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் ஸ்டாலின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று கூறி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதையடுத்து முதலமைச்சராக பதிவேற்றதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் Chief Minister Of Tamil Nadu என மாற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளைத் தொடங்கினார் ஸ்டாலின். இதையடுத்து அமைச்சர்களும் பதவியேற்றுகொண்டனர். இந்நிலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
இறையன்பு பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இறையன்பு நாக்கை ஆட்சியராக தனது பணியைத் தொடங்கியவர். காஞ்சிபுரம் ஆட்சியர் சுற்றுலா துறை செயலாளராக பணியாற்றி உள்ளார். 2019 முதல் அண்ணா மேலாண்மை கல்வி நிறுவன இயக்குனராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.