Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தின் முக்கிய அமைச்சர்… மருத்துவமனையில் திடீர் அனுமதி…!!!

தமிழக உணவுத்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்தக் கொடியை கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடு எதுவும் இல்லாமல் அனைவரையும் கொடூரமாக தாக்கி வருகிறது. அதனால் தற்போது வரை அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சரின் உடல்நிலை குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

Categories

Tech |