தமிழகத்தில் முதன்முறையாக ஒருவருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் முதன்முறையாக ஒருவருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நபருக்கு, தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.