Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் அக்.,2-ந் தேதி…. தமிழக அரசு உத்தரவு…!!!!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அக்.,2-ந் தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டத்தினை சுழற்சி முறையை பின்பற்றி நடத்த வேண்டும். குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி கூட்டம் நடத்தவும், டெங்கு பரவுவதை கட்டுப்படுத்துதல், பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |