சென்னை கிண்டியில் உள்ள சென்னை ஐஐடியில் நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்தநிலையில் கேரளாவைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நாயர் என்ற எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவு திட்ட கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இவர் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ஹாக்கி மைதானத்தில் உன்னி கிருஷ்ணன் உடை எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் எரித்து கொலை செய்தார்களா என்ற கோணாத்தில் போலீசார் விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் இவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவர் அறையில் கிடைத்த கடிதத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.