தமிழகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு 2 சென்ட் நிலம் வாங்கி வீடு கட்டித் தரப்படும் என முதல்வர் பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதான் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து தருவதாக கட்சி தலைவர்கள் வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி அதிமுக கடந்த சில நாட்களாகவே மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்று விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வீடு இல்லாதவர்களுக்கு 2 சென்ட் நிலம் வாங்கி வீடு கட்டித் தரப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.