தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வீடு மற்றும் வாசிங் மிஷின் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி அதிமுக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது மட்டுமன்றி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்து கட்சி வெளியிட்டு வருகிறது. இதற்கு மத்தியில் தாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்காததால் அந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்று வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். அதனால் சற்று பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக தேர்தல் அறிக்கைகளை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது. அதன்படி அதிமுக மற்றும் திமுக போட்டியிட்டுக் கொண்டு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் அம்மா இல்லம் திட்டத்தில் வீடு கட்டித் தரப்படும் என பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் விலையில்லா 6 கேஸ் சிலிண்டர்கள், அனைவருக்கும் சூரிய அடுப்பு, வாஷிங்மெஷின் வழங்கப்படும். கரும்பு நெல் குறைந்த பட்ச ஆதார விலை உயர்த்தப்படும் என கூறியுள்ளார்.