தமிழகத்தில் புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் ஊழியர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியை அந்தந்த மாவட்டங்களிலேயே நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு முன்னதாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து பவானிசாகர் பயிற்சி மையத்திற்கு சென்ற அரசு ஊழியர்கள் பயிற்சி பெற வேண்டிய சூழல் இருந்தது. இதனை தவிர்த்து தாமதம் ஆகாமல் புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி வழங்கப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி இனி அரசு பணியில் சேரும் ஊழியர்கள் மற்றும் பதவி உயர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் பயிற்சி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. இது அரசு பணியில் சேரும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.