கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் அரசு பள்ளி மாணவர்களிடம் மத பிரச்சாரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இங்கு தையல் கலை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியை ஒருவர் இந்து மத மாணவர்களிடம் இந்து மத கடவுள்களை அவதூறாக பேசிய தோடு கிறிஸ்துவ மத பிரார்த்தனைகளை சொல்லி பிரார்த்தனை செய்ய வற்புறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.