தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோன தொற்றின் இரண்டாம் அலை தற்போது தமிழக அரசின் பல்வேறு முயற்சிகளின் காரணமாக, தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. அதேபோன்று கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு வருகின்றது. அதன்படி தமிழகத்தில் அரியலூர், கடலூர், தர்மபுரி, காஞ்சி,
கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கொரோனா மரணம் இல்லை என அரசு அறிவித்துள்ள. மேலும் பிற மாவட்டங்களில் இறப்பு எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது. இன்னும் சில நாட்களில் தமிழகம் கொரோனா மரணம் இல்லாத மாநிலமாக மாறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Categories