தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விவரங்களை தமிழக அரசு வெளியிட்டது. மேலும் பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண்கள் ஜூலை 31க்குள் வெளியாகிவிடும் என்றும் ஆகஸ்ட்- 1க்கு பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அதிரடியாக அறிவித்துள்ளார். அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்படும். ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவங்கும். பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பதவி நியமனங்களில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.