Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் திமுக… பரபரப்பு தகவல்…!!!

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாக அதிமுக தமிழகத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது.

அதுமட்டுமன்றி ஸ்டாலின் கடந்த சில நாட்களாக, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று ABP news c-voter கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. திமுக அணிக்கு 154 முதல் 162 இடங்கள் கிடைக்கும். அதிமுக அணிக்கு 62 இடங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.

மேலும் மக்கள் நீதி மையம் கட்சி ஒன்று முதல் இரண்டு இடங்களும், அமமுக கட்சிக்கு ஒன்று முதல் ஐந்து இடங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 18ஆம் தேதி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் திமுக வெற்றி பெறும் என தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |