தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட விஷயங்களை இன்றிலிருந்து தொடங்கலாம் என்று கூறினார். அதில் பல்வேறு தகவலை தெரிவித்தார். அந்த வகையில் தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளதாக அறிவித்துள்ளார்.
வாக்காளர்களில் ஆண்களை விட பெண்கள் அதிகம். பெண்கள்: 3.14 கோடி, ஆண்கள்: 3.03 கோடி, மூன்றாம் பாலினத்தவர்: 7.758 பேர் வாக்காளர்களாக உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.6 லட்சம் பேரும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் பேரும் வாக்காளர்களாக உள்ளனர்.