Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை – விரைவில் அவசர சட்டம் ?

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க தமிழக அரசு சார்பில்  அவசர சட்டம் இயற்ற இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான பரிந்துரையை அரசுக்கு இன்னும் சற்று நேரத்தில் சமர்ப்பிக்கிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு. பரிந்துரையின் அடிப்படையில் ஆன்லைன் ரம்மி தடை விதிக்க அவசர சட்டம் இயற்றப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆன்லைன் ரம்மியால் நம்மில் பலர் பணத்தை இழந்தது மட்டுமின்றி விலைமதிப்பற்ற உயிரையும் மாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனை தடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு குழு அமைத்து அதன் அடிப்படையில் சட்டம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தது தமிழக அரசு.  இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி குறித்து பரிந்துரையை அரசுக்கு சற்று நேரத்தில் சமர்ப்பிக்கிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு. இந்த பரிந்துரையின் அடிப்படையில் அளவிற்கு அவசர சட்டம் இயற்றப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Categories

Tech |