தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்ப பெற கோரி விசிக தலைவர் தொல் திருமாவளவன் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்ப பெற கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு அனுமதி வழங்க காவல்துறைக்கு தடை விதிக்க வேண்டும். மத நல்லிணக்கத்தை குழைத்து பிரித்தாலும் கொள்கையை பின்பற்றுவது ஆர்.எஸ்.எஸ்.. நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..