Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இங்கு நாளை பீஸ்ட் திரைப்படம் வெளியாகாது…. ஷாக் நியூஸ்….!!!!

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தமிழகம் முழுவதும் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தியேட்டர்களில் வெளியாகாது என்று மாநகராட்சி தியேட்டர் உரிமையாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளனர்.

திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் ஒப்பந்த விதிமுறைகள் தொடர்பான பிரச்னையின் காரணமாக இந்த முடிவை கரூர் திரையரங்க உரிமையாளர்கள் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கரூர் மாநகராட்சிகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகாது என்ற அறிவிப்பு விஜய் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |