Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இடைத்தேர்தல்…. தேர்தல் அதிகாரி அதிரடி அறிவிப்பு….!!!

ஸ்ரீவில்லிபுத்தூரில் உயிரிழந்த காங்கிரஸ் வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றால் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 வரை வாக்குப்பதிவு நடந்தது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்கு தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு வாக்கு இயந்திர கோளாறுகள் சரி செய்யப்பட்டு, மக்கள் அனைவரும் வாக்களித்தனர். அதிலும் சில கட்சிகள் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி கலவரம் செய்தனர்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 72.78% வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள், குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஒருவேளை அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். மே 2 வாக்கு எண்ணிக்கை வழக்கம்போல் நடைபெறும். மாதவராவ் வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் கட்டாயம் நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |