தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதலமைச்சர், விஐபிகள் பாதுகாப்பு பணிகளுக்கு பெண் போலீசை ஈடுபடுத்த வேண்டாம் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். வழி நெடுக பெண் போலீசார் காத்திருப்பதை தவிர்க்க காவல்துறை துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து, மண்டல ஐஜி, ஆணையர்கள், அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி சாலைகளில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசாருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.