தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் வீட்டுக்கு தேவையான இலவச அரிசி, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதனையடுத்து தற்போது திமுக ஆட்சி அமைத்த பிறகு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், பத்தாண்டுகளாக பால் வளத் துறையில் முடக்கி வைக்கப்பட்ட வாணிபம் இப்போது தலைதூக்கி உள்ளது. தமிழகத்தில் இனி ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.