தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். இதற்கு பெண்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் கொரோனா காலகட்டத்தில் மக்கள் நலனை கருத்தில்கொண்டு பல அசத்தலான அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் புதிய மின் நுகர்வோர் சேவை மையத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இனி 24 மணி நேரமும் பொதுமக்கள் 9498794987 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு மின் நுகர்வோர் சேவை தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம். 1912 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்தால் புதிய எண்ணிற்கு மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.